217 Views

பரவிய செய்தி :

சித்த மருத்துவர் தணிகாசலத்திற்கு கிடைத்த மிக பெரிய வெற்றி!! தமிழக அரசு அங்கீகாரம்??

Facebook link

மதிப்பீடு :

விளக்கம் :

Tamil cure என்ற youtube தளத்தில் ” சித்த மருத்துவர் தணிகாசலத்திற்கு கிடைத்த மிக பெரிய வெற்றி!! தமிழக அரசு அங்கீகாரம்?? ” 👈 இந்த செய்தி அனைத்து மக்களும் பார்த்து அனைவருக்கும் பகிர இந்த செய்தி வைரல் ஆனது …, அப்படி அந்த செய்தியில் கூறப்பட்டது என்ன வென்றால், நம் தமிழ்நாடு அரசு திரு தணிகாச்சலத்தின் மருந்தை எடுத்து 50 வயதுக்கு மேற்ப்பட்ட கொரனா பாதித்த நபர்களுக்கு கொடுத்து 24 மணி நேரத்தில் குணமடைந்தது என அந்த செய்தியில் கூறப்பட்டது, இதை பற்றி எனது நண்பர் என்னிடம் இது உண்மையா என கேட்டார், நாமும் இதை பற்றி இணையதளத்தில் ஆராய்ந்து பார்த்ததில் அனைத்து சமூக வளைதலத்திலும் இந்த செய்தி வைரல் ஆனதை காண முடிந்தது. அவற்றில் சில கீழே கொடுத்துள்ளேன்.

இப்படி பலரும் இந்த செய்தியை பகிர்ந்துள்ளனர், இந்த செய்தியை பார்த்து சிலர் இது உண்மை என நினைத்து தமிழருக்கு கிடைத்த வெற்றி என பலரும் தனது கருத்துக்களை தெருவித்தனர்.

உண்மை என்ன..?

இப்படி வைரலாகும் அந்த செய்தி உண்மையா என ஆராய்ந்து பார்க்கையில் , நேற்று (30.04.2020) சாணக்கியா என்ற youtube பக்கத்தில் திரு தணிக்காச்சலத்தின் நேர்முக பேட்டி முன்னால் தந்தி டீவி-யின் தலைமை செய்திஆசிரியர் பாண்டே அவர்களுடன் நடந்தது , அதில் பாண்டே அவர்கள் தமிழகத்தில் யாரெனும் ஒருவருக்கு உங்கள் மருத்துவம் மூலமாக கொரனா நோயை குணப்படுத்தி உள்ளீர்கள என கேள்வி கேட்டார், அதற்க்கு இதுவரை இல்லை என பதில் அளிப்பார். அந்த கானொளியை கீழே தந்துள்ளேன்.

youtube

மேலும் இது தொடர்பாக திரு தணிக்காச்சலத்தின் முகநூல் பக்கத்தில் இன்று (02.05.2020) ஒரு கானொளியை பதிவிட்டுள்ளார். அதில் கூட பாண்டே அவர்களுடனான பேட்டியை பற்றி தான் பேசியுள்ளாரே தவிர ” சித்த மருத்துவர் தணிகாசலத்திற்கு கிடைத்த மிக பெரிய வெற்றி!! தமிழக அரசு அங்கீகாரம்??” 👈 இந்த செய்தியை பற்றி பேசவில்லை, அந்த கானொளியும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அவருடைய பக்கத்தில் இணையத்தில் வைரலாகும் செய்தியை ஒரு முகநூல்வாசி கேட்டுள்ளார் , அதற்க்கு திரு தணிகாச்சலம் அவர்கள் நானும் அந்த செய்தியை பார்க்கிரேன் என்று பதில் சொல்கிறாரே தவிர அது உண்மை அல்லது பொய் என கூற வில்லை, அதன் புகைபடம் கீழே உள்ளது.

மீண்டும் அந்த Tamil cure என்ற youtube தளத்தில் மற்றொரு செய்தி இன்று பதிவிட்டுள்ளனர், அதில் ” சித்த மருத்துவர் தணிகாசலம் சோதனை வெற்றி….அரசின் அடுத்த முடிவு என்ன தெரியுமா?? மக்கள் எல்லையற்ற மகிழ்ச்சி” என்று கூறிஉள்ளனர்.

மேலும் படிக்க : கொரோனா வைரஸ் குறித்து பதிவிட்டால் அட்மின்கள், உறுப்பினர்கள் கைதா ?

இதில் நம் தமிழ்நாடு அரசு திரு தணிகாச்சலத்தின் மருந்தை மத்திய அரசுக்கு பரிந்துரைக்க வேண்டிய செயல்களில் ஈடுபட்டுள்ளதக தெருவித்துள்ளது.

முடிவு என்ன ..?

இணையத்தில் வைரலாகும் இந்த செய்திகள் அனைத்தும் உண்மையில்லை என்றும், இந்த செய்திகள் அனைத்தும் நமது தமிழக அரசின் அதிகாரப்பூர்வ வளைதலத்தில் இடம்பெறவில்லை. மேலும் இந்த மதிரியான பொய் செய்திகளை யாரும் நம்பி பகிர வேண்டாம் என நமது இணையதலம் மூலமாக கேட்டுக்கொள்கிறோம்.

Translate »