பரவிய செய்தி :
கொரோனாவுடன் வாழ பழகிக்கணும் – மத்திய அரசு. அதுக்கு முதல்ல இந்த பொண்ணு ஒத்துக்கணும், பிறகு என் பொஞ்சாதி ஒத்துக்கணும்.

மதிப்பீடு :

விளக்கம் :
கொரோனா வைரஸ் பரவல் தொடங்கிய தருணத்தில் இருந்து கொரோனா என பெயர் வைத்த உணவு பொருட்கள், வாகனங்கள் மற்றும் பெயர் பலகைகள் உள்ளிட்டவை சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டன. குறிப்பாக, கொரோனா வைரசையே ட்ரோல் செய்யும் அளவிற்கு அத்தகைய பெயர் பயன்படுத்தப்பட்டது.
அதில் மேற்காணும் புகைப்படத்தில் இருக்கும் பெண்ணின் புகைப்படமும் விதிவிலக்கு அல்ல. தமிழ் மட்டுமின்றி இந்திய அளவில் இப்பெண்ணின் புகைப்படம் வைரல் செய்யப்பட்டது. அதற்கு காரணம் அந்த பெண்ணின் உடையில் இருக்கும் பெயர் பேட்ஜில் ” Corona ” என இடம்பெற்று இருப்பதே.Advertisement
தற்போது கொரோனா வைரஸ் மத்தியில் பாதுகாப்பாக வாழ பழகிக் கொள்ள வேண்டும் என அறிவிப்புகள் வெளியான பிறகு இந்த பெண்ணின் புகைப்படம் மேன்மேலும் பகிரப்பட்டு வருகிறது. உண்மையில், அந்த பெண்ணின் பெயர் கொரோனாவா என தேடிப் பார்க்க தீர்மானித்தோம்.

வைரல் செய்யப்படும் பெண்ணின் புகைப்படத்தினை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2019 ஜனவரி 27-ம் தேதி indonesiapolisitni எனும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகும் பெண்ணின் புகைப்படம் இடம்பெற்று உள்ளது. ஆனால், அதில் இடம்பெற்ற புகைப்படத்தில் இருக்கும் பெயர் பேட்ஜில் ” Shella ” என உள்ளது. 2017-ல் மற்றொரு இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் இப்புகைப்படம் இடம்பெற்று இருக்கிறது.


புகைப்படத்தில் இருக்கும் இந்தோனேசிய நாட்டின் ராணுவ உடையில் இருக்கிறார். அவரின் பெயர் ஷெல்லா என்பதே உண்மை. அவரின் நேம் பேட்ஜில் கொரோனா என ஃபோட்டோஷாப் செய்து தவறாக வைரல் செய்து வருகிறார்கள். தவறான புகைப்படத்தை பகிர வேண்டாம்.