பரவிய செய்தி :
எஸ்பிஐ வங்கியின் அவசர கால திட்டம். 45 நிமிடத்தில் ரூ.5 லட்சம் வரை கடன் வசதி. 6 மாதத்திற்க்குப் பின்பு தவணைக் காலம் தொடங்கும்.

மதிப்பீடு :

விளக்கம் :
பாரத் ஸ்டேட் வங்கி “YONO” செயலியின் மூலம் தனது வாடிக்கையாளர்களுக்கு 45 நிமிடத்தில் கடன் வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. மேலும் இதற்கான சுலப தவணை 6 மாதங்களுக்கு பிறகு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளதாக முன்னணி ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகி உள்ளது.


ஒன் இந்தியா தமிழ், சமயம் தமிழ், இந்து தமிழ் திசை உள்ளிட்ட தமிழ் செய்தி இணையதளங்களில் ஃபார்வர்டு செய்யப்படும் தகவல் வெளியாகி இருக்கிறது. அதேபோல், டைம்ஸ் ஆப் இந்தியா, நியூஸ் 18 தெலுங்கு உள்ளிட்ட செய்தி தளங்களிலும் வெளியாகி இருக்கிறது.


ஆனால், அத்தகவலை பாரத் ஸ்டேட் வங்கி மறுத்துள்ளது. ” யோனோ செயலி ” மூலம் அவசரகால கடன்களை வழங்குவதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் வதந்தியை வாடிக்கையாளர்கள் நம்ப வேண்டாம். தற்போது அதுபோன்ற எந்தவொரு கடனும் வழங்கப்படவில்லை ” என எஸ்பிஐ வங்கி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளது.
இருப்பினும், கோவிட்-19 நெருக்கடியால் பணப்புழக்க சிக்கல்களை எதிர்கொள்ளும் சம்பளம் பெறும் வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக யோனோ செயலி மூலம் முன் அங்கீகரிக்கப்பட்ட தனிநபர் கடன் வழங்கலை அறிமுகப்படுத்தும் பணியில் உள்ளதாக எஸ்பிஐ தெரிவித்து உள்ளது.
ஆதாரம் :
Not offering emergency loans through YONO platform: SBI