120 Views

கொரோனா தாக்குதலுக்கு இன்று 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று மட்டும் 509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 9,227 ஆக மாநிலத்தில் உயர்ந்துள்ளது.

சென்னையை பொறுத்தளவில் இன்று 380 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக சென்னையில் சராசரியாக சுமார் 500 பேர் பாதிப்பு அடைந்து வந்தனர். இந்த நிலையில் இன்று எண்ணிக்கை கணிசமாக குறைந்திருக்கிறது.

கொரோனா தாக்குதலுக்கு இன்று 3 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்திருக்கிறது. 

தமிழகத்தில் இன்று 509 பேருக்கு கொரோனா பாதிப்பு! மொத்த எண்ணிக்கை 9,227 ஆக உயர்வு

தொற்று பாதிப்பு குணம் அடைந்து இன்று 42 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 2,176 ஆக அதிகரித்துள்ளது.

இன்று பாதிக்கப்பட்டவர்களில் 288 பேர் ஆண்கள். 221 பேர் பெண்கள் ஆவர். சென்னையின் பக்கத்து மாவட்டமான செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூரில் தலா 25 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. 

தமிழகத்தில் இதுவரையில் 6,136 ஆண்கள், 3,088 பெண்கள் மற்றும் 3 திருநங்கைகளுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

சென்னயில் மட்டும் மொத்தம் 5,262 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது ஒட்டுமொத்த தமிழக பாதிப்பில் சுமார் 75 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. 

குணம் அடைந்தவர்கள், உயிரிழப்புகளை தவிர்த்து மாநிலத்தில் 6,984 பேர் தற்போது கிசிச்சை பெற்று வருகின்றனர். 

Translate »