180 Views

Dubai : 

சமூக ஊடகத்தில் சர்ச்சைக்குரிய கருத்தினை தெரிவித்ததற்காக மேலும் மூன்று இந்தியர்களை பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக இதுபோன்ற வெறுக்கத்தக்க செயலில் ஈடுபடுவதை நிறுத்துமாறு வளைகுடா நாட்டிற்கான இந்திய துதர் அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சமையலர் ராவத் ரோஹித், கடைக்காரர் சச்சின் கின்னிகோலி மற்றும் ஒரு பணப் பாதுகாவலர் என மூவர் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இம்மாதிரியாக சமூக ஊடகங்களில் சர்ச்சைக்குரிய கருத்தினை தெரிவித்ததற்காக இது வரை அரை டஜன் இந்தியர்கள் பணியிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளனர் என வளைகுடா செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும், “சமூக ஊடகங்களில், இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துகளை பகிர்பவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து பெரியதாக கண்டுகொள்ளப்படாததாக தெரிகிறது” என செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

இது போன்று விருபத்தகாத வகையில் கருத்துகள் பகிரப்படுவது குறித்து கடந்த மாதம் 20-ம் தேதியன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸின் இந்தியத் தூதர் பவன் கபூர் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் இந்தியத் தூதர் :

“இந்தியாவும் அரபு நாடுகளும் எவ்விதத்திலும் பாகுபாடின்றி பழகி வருகின்றன. பாகுபாடு என்பது நமது தார்மீக துணிவுக்கும் சட்ட விதிக்கும் எதிரானது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள இந்தியர்கள் இதை எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும்” என கபூர் சமீபத்தில் ட்விட்ரில் தெரிவித்திருந்தார்.

ரோஹித் இடை நீக்கம் :

கடந்த வார இறுதியில் மூன்று பேர் தங்களது சமூக வலைத்தளங்களில் விரும்பத்தகாத வகையில் கருத்தினை தெரிவித்ததன் அடிப்படையில் பணியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என அறிக்கை ஒன்று குறிப்பிட்டுள்ளது. துபாயில் உள்ள இத்தாலிய உயர்தர உணவகங்களை இயக்கும் அசாடியா குழுமத்தின் செய்தித் தொடர்பாளர், ரோஹித் பணியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், ஒழுங்கு விசாரணையை எதிர்கொண்டுள்ளதாகவும் தகவல் தெரிய வருகின்றன.

கின்னிகோலி இடைநீக்கம் :

ஷார்ஜாவை தளமாகக் கொண்ட நியூமிக்ஸ் ஆட்டோமேஷன் தங்கள் பணியாளர் கின்னிகோலியை இடைநீக்கம் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. மேலும், “நாங்கள் அவரது சம்பளத்தை நிறுத்தி வைத்துள்ளோம், அவரை வேலைக்கு வர வேண்டாம் என்று கூறியுள்ளோம். இந்த விவகாரம் விசாரணையில் உள்ளது. ஒருவரின் மதத்தினை அவமதித்தது அல்லது அவமதித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட எவரும் அதன் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்,” என நிறுவன உரிமையாளர் கூறியுள்ளார்.

விஷால் தாக்கூர் நற்சான்றிதழ்கள் பறிப்பு :

விஷால் தாக்கூர் என்ற பெயரில் பேஸ்புக் பக்கத்தில் பல சர்ச்சைக்குரிய செய்திகளை வெளியிட்ட ஒரு ஊழியரைத் துபாயைச் சேர்ந்த டிரான்ஸ் கார்ட் குழு பணி நீக்கம் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. மேலும், “விசாரணையைத் தொடர்ந்து இந்த ஊழியரின் உண்மையான அடையாளம் சரிபார்க்கப்பட்டு, அவரது நற்சான்றிதழ்கள் பறிக்கப்பட்டது. பின்னர், நிறுவனத்தின் கொள்கைப்படி அவர் துபாய் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.“ என நிறுவத்தின் அறிக்கை கூறுகிறது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் முன்னாள் மற்றும் தற்போதைய இந்திய தூதர்கள் இருவரும் வெறுக்கத்தக்கக் கருத்துகளைப் பொதுவெளியில் பகிர்வது தவறானது என அரபு வாழ் இந்தியர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், இம்மாதிரியான பணிநீக்கங்கள் நடைபெற்று வருகின்றன.

கடந்த மாதம், ஷார்ஜாவைச் சேர்ந்த தொழிலதிபர் சோஹன் ராய் தன்னுடைய கவிதை மூலம் மத உணர்வுகளை புண்படுத்தியிருந்தாக மன்னிப்புகோரியிருந்தார்.

இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக களத்தில் இருந்த டெல்லி மாணவிக்கு அச்சுறுத்தல் விடுத்ததற்காகச் சமையல்காரர் திரிலோக் சிங் துபாயில் உள்ள உணவகத்திலிருந்து நீக்கப்பட்டார்.

Translate »