பரிசோதனை அதிகமாக செய்யப்பட்டு வருவதால் பாதிப்பு எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது.
தமிழகத்தில் இன்று புதிதாக 477 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,585 ஆக உயர்ந்திருக்கிறது.
இதுதொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது-
தமிழகத்தில் இன்றுமட்டும் 477 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 10,585-ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று ஒரே நாளில் 332 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. கொரோனாவால் இன்று மேலும் 3 உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 74 -ஆக உயர்ந்திருக்கிறது.
இன்று பாதிப்பு ஏற்பட்ட 477 பேரில் 384 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். 93 பேர் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்தவர்கள். பரிசோதனை அதிகமாக செய்யப்பட்டு வருவதால் பாதிப்பு எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது.
இன்று ஒரே நாளில் மட்டும் 939 பேர் குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் குணம் அடைந்தோரின் எண்ணிக்கை 3,538 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் தொடர்ந்து 3-வது நாளாக கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 500-க்கும் குறைவாக பதிவாகிக் கொண்டிருக்கிறது. அதிலும் சென்னை மற்றும் அதன் சுற்று மாவட்டங்களை சேர்ந்தவர்கள்தான் அதிகம்.
டிஸ்சார்ஜை பொருத்தளவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 939 பேர் குணம் அடைந்துள்ளார்கள். இது மக்களுக்கும் சுகாரத்துறையினருக்கும் நம்பிக்கையை ஏற்படுத்துவதாக உள்ளது.