289 Views

பரவிய செய்தி :

மகாராஷ்டிராவில் இன்று இரண்டு சாதுக்கள் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர்…!!!!

Facebook link 

மதிப்பீடு :

விளக்கம் :

இந்த பக்கதில் பதிவிட்டுல்ல செய்தியை ஆராயிந்து பார்க்கையில் இந்த சம்பவம் மஹாராஸ்ட்ரா மாநிலம், பால்கரில் உள்ள காட்ச்சின் என்ற கிராமைத்தில் நடந்துள்ளது. ஆனால் அங்கு நடந்த சம்பவயத்துக்கும் இஸ்லாமியர்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை…

மேலே உள்ள முகநூல் பக்கத்தின் பதிவை போல்  இரண்டு சாதுக்கள் மறைவை  இந்திய ஊடகங்கள் இந்த பெயர்களை உங்களுக்கு சொல்லாது என்று கூறுவது தவறான செய்தி . இவர் முகநூல் பக்கத்தில் பதிவிடும் 2 தினங்களுக்கு முன்பே வடமாநில பத்திரிக்கையில் இந்த தாக்குதலை பற்றி கூறி உள்ளன.

உண்மை என்ன ?

மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள கிராம பகுதியில் இக்கொடூரமான சம்பவம் நிகழ்ந்து உள்ளது. குழந்தைகளின் உடல் உறுப்புகளை திருடும் கும்பல் என பரவிய வதந்தியால் 70 வயது முதியவர் உள்பட 3 பேர் கும்பலால் கடுமையாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டதாக ஏப்ரல் 18-ம் தேதி NDTV செய்தியில் வைரலான வீடியோ உடன் வெளியாகி இருக்கிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் 3 பேர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் குறித்து முன்னணி செய்திகள் பலவற்றில் வெளியாகி இருக்கிறது. பால்கர் மாவட்டத்தில் உள்ள கடக்சிஞ்சாலே கிராம பகுதியின் வழியாக துக்க காரியத்திற்கு காரில் சென்றவர்களை மறித்த மக்கள் திருடர்கள், குழந்தை கடத்தல் கும்பல் என தவறாக நினைத்து அவர்களை 90-க்கும் மேற்பட்டவர்கள் தாக்கியுள்ளனர். கார் ஓட்டுநர் போலீசுக்கு அளித்த தகவலில் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். எனினும், அவர்களால் கும்பலை தடுக்க முடியவில்லை. இதையடுத்து, காவல்துறையின் வாகனத்தையும் தாக்கியுள்ளனர்.

கும்பலால் தாக்கப்படட சுஷில்கிரி மகாராஜ், நிலேஷ் தேல்கதே மற்றும் ஜெயேஷ் தேல்கதே இறந்துள்ளனர். இதில் இரண்டு பேர் மும்பையைச் சேர்ந்தவர்கள். இந்த சம்பவத்தில் காஸா போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த காவலர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் இதுபோன்ற தாக்குதல்கள் நடப்பது முதல்முறை அல்ல. இதற்கு முன்பாக, காவல் அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களை திருடர்கள் என நினைத்து தாக்கிய சம்பவம் நிகழ்ந்து இருக்கிறது என இந்தியா டுடே செய்தியில் தகவல் வெளியாகி இருக்கிறது.

பால்கர் மாவட்டத்தில் 2 சாதுக்கள் மற்றும் ஓட்டுநர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து அரசியல் தலைவர்களும் கருத்துக்களை பதிவிட்டு இருக்கிறார்கள். அம்மாநில முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்ததோடு, சம்பவம் குறித்த விரிவான விசாரணை நடத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தாக்குதல் நடத்தியவர்களை போலீசார் கைது செய்து உள்ளதாக ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார்.

பால்கர் மாவட்ட காவல்துறை வெளியிட்ட ட்வீட் பதிவில், தாக்குதல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 110 பேரில் 9 பேர் சிறுவர்கள் என்றும், 101 பெறும் ஏப்ரல் 30-ம் தேதி வரை போலீஸ் கஸ்டடியில் இருக்க போவதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

ஆனால், பால்கர் மாவட்ட தாக்குதல் சம்பவம் மதம் சார்ந்த கண்னோட்டத்தில் பரப்பப்பட்டு வருகிறது. முஸ்லீம்கள் இந்து சாதுக்களை தாக்கி கொன்றாக இந்திய அளவில் சமூக வலைதளங்களில் ஓர் தவறான கருத்தை உருவாக்கி வருகிறார்கள். 2 இந்து சத்துக்களை கொன்றது முஸ்லீம்கள் எனக் கூறும் தகவலுக்கு ஆதாரங்கள் இல்லை.

அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பெரும்பாலும் முஸ்லீம் அல்லாதவர்களே. அங்கு படிப்பறிவு வீதம் 30%-ஐ தாண்டவில்லை. பெரும்பாலானவர்கள் விவசாயம் மற்றும் அருகில் உள்ள தொழிற்சாலை பகுதியில் வேலை பார்ப்பவர்கள். அப்பகுதியில் குழந்தை கடத்தல் மற்றும் திருடர்கள் என பரவும் வதந்திகளை உண்மை என நினைத்து தாக்குதல் நடத்தப்படும் சம்பவங்கள் தொடர்கின்றன.

நம்முடைய தேடலில் இருந்து, ” மகாராஷ்டிராவில் இன்று இரண்டு சாதுக்கள் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது தவறானது. வீடியோவில் தாக்கப்படுபவர்கள் திருடர்கள் என நினைத்து ஊர் மக்களால் தாக்கி கொல்லப்பட்டவர்கள்.

ஆதாரம் :

Sadhus Among 3 Killed By Mob In Maharashtra, BJP Seeks Probe

3 lynched in Palghar after rumours over mistaken identity

3 men lynched in Maharashtra on suspicion of being robers

3 Men Brutally Killed By Mob In Maharashtra’s Palghar, Police Arrest 110

Translate »