378 Views

பரவிய செய்தி :

இரண்டு இந்து சாதுக்கள் மறனத்துக்கு பின்னால் இருப்பது முஸ்லீம் மற்றும் கிறுஸ்தவ மிசுனரிகளா….!!!!???

மதிப்பீடு :

விளக்கம் :

மாரிதாஸ் கூறுவது என்னவென்றால் மஹாராஸ்ட்ரா மாநிலம், பால்கரில் உள்ள காட்ச்சின் என்ற கிராமைத்தில் இரண்டு இந்து சாதுக்கள் அந்த கிராமத்தினரால் அடித்து கொன்றனர். ஆனால் அங்கு நடந்த சம்பவயத்துக்கும் இஸ்லாமியர்கள் மற்றும் கிறுஸ்தவ மிசுனரிக்கும் சம்மந்தமம் உள்ளதாக அவர் ஒரு இணையதல செய்தியை முன்வைத்து பேசுகிறார்.

உண்மை என்ன ?

மாரிதாஸ் பார்த்த அந்த இணையதள பக்கத்துக்கு போய் பார்த்தால் அந்த இணையதளம் ஒரு R.S.S உறுப்பினரால் செயல்படுவது, அறிய முடிந்தது.

இந்த இணையதளத்தை பார்த்து அவர் கூறிய தகவலை ஆராயிந்து பார்க்கையில், அது முற்றிலும் பொய் என தெரியவந்தது. அதே சமயம் அந்த மாநில காவல் துறையினர், இந்த படுகொலையில் ஈடுபட்ட 110 பேரை கைது செய்துள்ளது. மற்றும் இந்த சம்பவைத்தை கண்காணிக்காமல் தவறவிட்ட இரு காவல் அதிகாரிகளை இடைநீக்கம் செய்துள்ளது .

Tweet link

மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவற்கள் உள்ளூர் பழங்குடி சமூதயத்தை சேர்ந்தவர்கள் என அம்மானநில சிஐடி போலீஸார் தெருவித்துள்ளனர்.

அந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபர்களில் நான்கு பேர் பா.ஜா.க கட்சியின் முக்கிய தலைவர்கள் ஆவர். மேலும் அந்த கிராம தலைவராக கடந்த 20 வருடங்களாக பா.ஜா.க வை சேர்ந்தவறே.. வெற்றி பெற்றுள்ளார். இப்படி பட்ட அந்த பா.ஜா.க கோட்டையில் இஸ்லாமியர்கள் மற்றும் கிறுஸ்தவ மிசுனரிகள் தான் அந்த 2 சாதுகளை கொண்றனர் என்று மாரிதாஸ் கூறுவது நகைப்புக்கூறியது.

அவர்கள் பா.ஜா.க வை சேர்ந்தவற்கள் என்பதற்கான ஆதாரம் கீழே உள்ளது.

ஆனால், பால்கர் மாவட்ட தாக்குதல் சம்பவம் மதம் சார்ந்த கண்னோட்டத்தில் மாரிதாசஸ் மற்றும் R.S.S ஆல் பரப்பப்பட்டு வருகிறது. முஸ்லீம்கள் மற்றும் கிறுஸ்தவ மிசுனரிகளால் இந்து சாதுக்களை தாக்கி கொன்றாக இந்திய அளவில் சமூக வலைதளங்களில் ஓர் தவறான கருத்தை உருவாக்கி வருகிறார்கள். 2 இந்து சத்துக்களை கொன்றது முஸ்லீம்கள் மற்றும் கிறுஸ்தவ மிசுனரிகளால் எனக் கூறும் தகவலுக்கு ஆதாரங்கள் இல்லை.

அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பெரும்பாலும் முஸ்லீம் மற்றும் கிறுஸ்தவர் அல்லாதவர்களே. அங்கு படிப்பறிவு வீதம் 30%-ஐ தாண்டவில்லை. பெரும்பாலானவர்கள் விவசாயம் மற்றும் அருகில் உள்ள தொழிற்சாலை பகுதியில் வேலை பார்ப்பவர்கள். அப்பகுதியில் குழந்தை கடத்தல் மற்றும் திருடர்கள் என பரவும் வதந்திகளை உண்மை என நினைத்து தாக்குதல் நடத்தப்படும் சம்பவங்கள் தொடர்கின்றன.

ஏனோ, இது போன்று தவறாக செய்தி பரப்புபவர்களை நமது அரசாங்கம் எதுவும் செய்வதில்லை……😷😎

Translate »