பரவிய செய்தி :
உங்களுக்கு தெரியுமா ? நேரு காலத்தில் உருவாக்கப்பட்ட பிரதம மந்திரி நிவாரண நிதியத்திற்கு காங்கிரஸ் கட்சி தலைவர் நிரந்தர ட்ரஸ்டி. இதனால் தான் கோவிட்-19க்கு பிஎம் கேர் உருவாக்கினார்.

மதிப்பீடு :

விளக்கம் :
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பை சமாளிக்கும் பொருட்டு தேச மக்கள் நிதியுதவி அளிக்குமாறு ” PM Care ” அறக்கட்டளை புதிதாக உருவாக்கப்பட்டது. பிஎம் கேர் தொடங்கிய தருணத்தில் ஏற்கனவே பிரதம மந்திரி தேசிய நிவாரண நிதி இருக்கும் பொழுது எதற்காக தனியாக ஒன்றை உருவாக்கி உள்ளீர்கள் என்ற கேள்விகள் எழுந்தன.
இந்நிலையில், 1948-ம் ஆண்டு நேருவால் உருவாக்கப்பட்ட பிரதம மந்திரி தேசிய நிவாரண நிதி (PMNRF) அமைப்புக்கு ட்ரஸ்டி ஆக காங்கிரஸ் தலைவர் சேர்க்கப்ட்டுள்ளார். PM Care போல் அல்லாமல் இப்போதைய பிரதமர் நிவாரண நிதி பயன்படுத்த காங்கிரஸ் தலைவரிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால், புதிதாக துவங்கப்பட்ட PM Care நிதியை பயன்படுத்த மோடி , நிதி மந்திரி, ராணுவ மந்திரி மற்றும் உள்துறை மந்திரியிடம் ஒப்புதல் பெற வேண்டும். இதனால் தான் மோடி கோவிட்-19-க்கு PM Care உருவாக்கினார் ” என ஓர் மீம் பதிவு வைரலாகி வருகிறது.
உண்மை என்ன ?
இந்திய ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் பிரதம மந்திரி தேசிய நிவாரண நிதிக்கு காங்கிரஸ் தலைவர் ட்ரஸ்டி என்றும், நிதியை பயன்படுத்த அவரிடம் அனுமதி பெற வேண்டும் எனக் கூறும் தகவல் முற்றிலும் தவறானது.

பிரதம மந்திரி தேசிய நிவாரண நிதி உடைய அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று ஆராய்கையில், அமைப்பின் தலைவராக இருப்பது இந்திய பிரதமரே எனக் கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் ட்ரஸ்டியாகவோ அல்லது அவர்களிடம் அனுமதி பெற வேண்டும் என்றோ என எங்கும் இடம்பெறவில்லை.
ஒருவேளை, PMNRF ஓர் காங்கிரஸ் தலைவரை கொண்ட ட்ரஸ்ட் ஆக இருந்தால் அந்த முறையை நீக்கி விட்டு முழு அரசு கட்டுப்பாட்டில் மாற்ற மத்திய ஆட்சியாளர்களுக்கு எவ்வளவு நேரம் எடுக்கும். இந்த நிதியத்தில் இருந்தே தேசிய அளவில் ஏற்படும் இயற்கை பேரிடர் பாதிப்புகளுக்கு நிவாரணங்கள் வழங்குவது வழக்கமாகும். அப்படி இருக்க புதிதாக பிரதமரை முன்னிலைப்படுத்தும் பிஎம் கேர் தனி நபரின் அதிகாரக் குவியலாக இருக்கும் என காங்கிரஸ் தரப்பில் இருந்து கேள்விகள் எழுந்தன.
நமக்கு கிடைத்த தகவலில் இருந்து, PMNRF-க்கு காங்கிரஸ் தலைவர் ட்ரஸ்டி என தவறான தகவலை அரசியல் சார்ந்து பரப்பி வருகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள முடிந்தது.
ஆதாரம் :
பிரதம மந்திரி தேசிய நிவாரண நிதி
No Fields Found.