302 Views

தமிழகத்தில் காய்கறி சந்தைகளுக்கு வரக்கூடிய மக்களுக்கு கொரானா பரவுவதை தடுக்க பல்வேறு இடங்களில் கிருமிநாசினி சுரங்கங்கள் மாவட்ட நிர்வாகம் மூலமாகவும், தமிழக அரசு சார்பாகவும் அமைக்கப்பட்டன. 

இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பின் அறிவுறுத்தலையடுத்து, கிருமிநாசினி சுரங்கங்கள் அமைக்க வேண்டாம் என தமிழக பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் பொதுசுகாதாரத்துறை இயக்குநர் அவசர சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் கிருமிநாசினி சுரங்கங்கள் தவறான பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார். 

மேலும் கை கழுவும் பழக்கத்திலிருந்து மக்களை கிருமிநாசினி சுரங்கம் திசை திருப்புவதாகவும் தெரிவித்துள்ளார். கிருமிநாசினி சுரங்கங்களில் பயன்படுத்தப்படும் ஆல்ஹகால், குளோரின், லைசால் ஆகியவற்றை மனிதர்கள் மீது தெளிப்பது பயனற்றது எனவும் அது தீங்கு விளைவிக்கும் எனவும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. எனவே கிருமிநாசினி சுரங்கங்களை ஏற்படுத்தவும், அதனை பயன்படுத்தவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
 

No Fields Found.
Translate »