பரவிய செய்தி :
இந்தோனேசியாவில் கிருமிநாசினியாக பயன்படுத்தப்படும் “கள்”.

மதிப்பீடு :

விளக்கம் :
பனை மரத்தில் இருந்து எடுக்கப்பட்ட “கள்” எனும் ஒரு வகை பானம் குறித்து தமிழகத்தில் பெரும்பாலானவர்கள் அறிந்து இருப்போம். பிற நாடுகளிலும் பனையில் இருந்து எடுக்கப்படும் பானம் கிடைப்பதுண்டு.
இந்தோனேசியாவில் கைகளை சுத்தப்படுத்தும் கிருமிநாசினிக்கு ஏற்பட்ட தட்டுப்பாட்டால் பனை மரத்தின் கள்ளை கிருமிநாசினியாக பயன்படுத்தத் தொடங்கி உள்ளார்கள் என்ற செய்தி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.Advertisement
செய்தித்தாளில் இருந்து , ” இந்தோனேசியாவின் பாலித் தீவில் கிருமிநாசினிக்கு ஏற்பட்ட தட்டுப்பாட்டிற்கு பாலித் தீவைச் சேர்ந்த மருத்துவ ஊழியர்கள் அந்நாட்டு அரசின் உதவியையோ அல்லது பிற நாடுகளின் உதவியை நாடவில்லை. மாறாக அவர்கள் பனை மரத்தில் இருந்து கிடைக்கும் கள்ளை கிருமிநாசினியாக பயன்படுத்தத் தொடங்கினர். இந்த யோசனை நல்ல பலனளித்து வருகிறது. இதற்காக உள்ளூர் கள் உற்பத்தியார்கள் தாமாக முன்வந்து 4 ஆயிரம் லிட்டர் கள்ளை வழங்கி உள்ளார்கள். இதைத் தவிர பாலித் தீவைச் சேர்ந்த போலீசார் மற்றும் தன்னார்வலர்கள் கள் சேகரிக்கும் பணியில் உள்ளனர் ” என இடம்பெற்று இருக்கிறது.

பாலித் தீவில் கள்ளை கிருமிநாசினியாக பயன்படுத்துவது குறித்து தேடுகையில், ” Bali’s miracle: Island turns wine into 10,000 bottles of hand sanitiser” எனும் தலைப்பில் ஏப்ரல் 8-ம் தேதி வெளியான இந்தியா டுடேவின் செய்தி கிடைத்தது.
செய்தியில், ” இந்தோனேசியாவின் விடுமுறை தீவான பாலியில் உள்ள மருந்தாளுநர்கள் கொரோனா வைரஸ் எதிர்ப்பிற்கு கைகளை சுத்தப்படும் கிருமிநாசினிகளின் பற்றாக்குறைகளை சமாளிக்க ஆயிரக்கணக்கான லிட்டர் புளித்த பனை ஒயின் மூலம் தனித்துவமான மற்றும் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளனர். இந்த யோசனை ஆனது பாலித் தீவின் காவல்துறை தலைவர் பெட்ரஸ் ரெயின்ஹார்ட் சிந்தனையாக இருந்துள்ளது. அராக் என அழைக்கப்படும் பிரபலமான பானத்தின் 4,000 லிட்டர்களை உள்ளூர் உற்பத்தியாளர்களிடம் இருந்து நன்கொடையாக கேட்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பாலியின் உதயனா பல்கலைக்கழக ஊழியர்கள் மதுவில் இருந்து கொரோனா வைரஸில் இருந்து பாதுகாக்கக்கூடிய ஹேண்ட்வாஷ் ஆக மாற்றும் பணியில் ஈடுபட்டனர். கை எரிச்சலைக் குறைக்க சில கிராம்பு மற்றும் புதினா எண்ணெய் கலவையில் சேர்க்கப்பட்டுள்ளன ” என வெளியாகி இருக்கிறது.

” இதுவரை நாங்கள் 10,600 பாட்டில்கள் கைகளுக்கான கிருமிநாசினியை அராக்கைப் பயன்படுத்தி உற்பத்தி செய்துள்ளோம், பாலி காவல்துறை அவற்றை தேவைப்படும் மக்களுக்கு வழங்கியுள்ளனர் ” என பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தேவா ஆயு ஸ்வஸ்தினி ஏ.எஃப்.பி-க்கு தெரிவித்து உள்ளார்.
பாலித் தீவில் கொரோனா வைரசால் 49 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர், 2 பேர் உயிரிழந்துள்ளனர். பாலியில் கிருமிநாசினி மருந்துகளின் தட்டுப்பாடு காரணமாக பனை மரத்தில் இருந்து எடுக்கப்படும் பானத்தின் மூலம் சில பொருட்களை கலந்து கிருமிநாசினியை தயாரித்து உள்ளார்கள். நேரடியாக பயன்படுத்தவில்லை. இதை முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு யாரும் பயன்படுத்த வேண்டாம்.
No Fields Found.