பரவிய செய்தி :
செல்போன் மூலமாக ஆர்டர் செய்யப்படும் பலசரக்குப் பொருட்களை வீடுகளுக்கு டெலிவரி செய்யும் முறையை சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தி உள்ளது.

மதிப்பீடு :

விளக்கம் :
கோவிட்-19 நோய்த்தொற்றால் வீடுகளில் முடங்கி கிடக்கும் மக்களுக்கு தேவையான பலசரக்குப் பொருட்களை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து வீடுகளுக்கு டெலிவரி செய்யும் முறையை சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தி உள்ளதாக ஒவ்வொரு பகுதிகளுக்கும் ஒவ்வொரு செல்போன் எண்களை கொண்ட மேற்காணும் தகவல் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
ஆனால், ஃபார்வர்டு தகவலில் கூறியது போன்ற சேவை வழங்கப்படவில்லை என Greater chennai corporation முகநூல் பக்கத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கொடுக்கப்பட்டுள்ள எண்கள் அனைத்தும் சென்னை மாநகராட்சியின் சேவை மற்றும் உதவி எண்களே. இருப்பினும், ஃபார்வர்டு தகவலில் கூறுவது போன்று பலசரக்குகளை வீடுகளுக்கு டெலிவரி செய்யும் சேவையை நாங்கள் செய்யவில்லை எனப் பதிவிட்டு உள்ளனர்.
சென்னை பகுதிகளுக்கு மாநகராட்சி வழங்கி இருக்கும் சேவை எண்களை தவறாக பயன்படுத்த வேண்டாம் மற்றும் தவறான தகவலை பரப்ப வேண்டாம்.