196 Views

பரவிய செய்தி :

ஆசிர்வாத் கோதுமை மாவு பாக்கேட்டில் “ஹலால்”- தரச்சான்று உள்ளது, ஆடு மற்றும் கோழி வெட்டும் முன் முஸ்லீம்கள் ஓதுவதக கூறி கத்தியில் எச்சி துப்பி வெட்டுவதற்க்கு “ஹலால்” என்று பெயர் …. !!???!!

facebook Link /

மதிப்பீடு :

விளக்கம் :

ஃபேஸ்புக் பக்கத்தில் ராம் என்பவர் பதிவிட்ட செய்தியில் உள்ள புகைப்படத்தை வைத்து ஆராய்ந்ததில், அந்த புகைப்படம் 25-06-2020 அன்று டுவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. அதில் ஆசிர்வாத் கோதுமை மாவு பாக்கேட்டில் “ஹலால்”- தரச்சான்று உள்ளது எனவே அதை இந்துக்கள் யாரும் வாங்க வேண்டம் என பதிவிடப்பட்டுள்ளது இதே போன்று மேலும் சில புகைப்படங்களை நம்மால் காண முடிந்தது . அதை கீழே இணைத்துள்ளோம் .

Twitter link

இது போன்று அந்த நிறுவனம் ஆஸ்த்திரேலியாவிலும் இந்த ஹலால் முத்திரை பதிக்க பட்டுள்ளதாக அனு என்ற ஆஸ்த்திரேலிய வாழ் இந்தியர் தனது ட்டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

உண்மை என்ன..?

நாம் முதலில் “ஹலால்” – என்றால் என்ன என்று தேடி பார்க்கையில் அது ஒரு வெளிநாட்டு ஏற்றுமதிக்கான ஒரு தரச்சான்று ஆகும், உதாரணமாக நம் இந்தியாவில் உணவு பொருட்களுக்கு தரப்படும் அக்மார்க், ஃபஸ்ஸி தரச்சான்றிதழ் போன்றது.

இது பற்றி ஆசிர்வாத் நிறுவனம் தன் ட்டுவிட்டர் பக்கத்தில் விரிவான விளக்கம் தந்துள்ளது. அந்நிறுவனம் கூறுவது என்னவென்றால், அந்த புகைப்படத்தில் இருக்கும் பொருளானது வெளிநாட்டிற்க்கு ஏற்றுமதி செய்தது , அங்கு இருக்கும் யாரோ ஒருவர் வெளியிட்ட புகைப்படம் என்றும், இது இந்தியாவில் விற்க்கப்பட்டது இல்லை என்றும் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

மேலும் அந்த நிறுவனம் இது வேண்டுமென்றே எங்கள் சந்தை மதிப்பை கெடுக்க பரப்பப்படும் பொய் என்று கூறிவுள்ளது.

Twitter Link

பல வெளிநாடுகளில் இந்த ஹலால் – தரச்சான்று உள்ள பொருட்களுக்கு மட்டுமே அந்நாடுகளில் விற்பனை செய்ய அனுமதிக்க படுகின்றன.

இதை வைத்து இங்கு இருக்கும் சில பிரிவினை மற்றும் மத வெறியர்கள் தவறான செய்தியை பரப்புகின்றன.

பின் குறிப்பு :

அந்த “ஹலால் “- தரச்சான்றிதழ் இந்தியாவில் பல நிறுவனங்கள் வைத்துள்ளன, குறிப்பாக இந்து சாமியார் நடத்தும் “பதஞ்சலி நிறுவனமும்” இந்த தரச்சான்றை வைத்துள்ளது. அதற்கான ஆதரம் கீழே உள்ளது.

எனவே இது போன்று மதரீதியான பொய் செய்திகளிடம் பரப்பும் , மத வெறியர்களிடம் இருந்து வரும் செய்திகளை உண்மை என நம்பி ஏமற வேண்டாம்.

நன்றி…🙏

ஆதாரங்கள் :

With an eye on global market, state firms make a beeline to get ‘halal’ tag

Patanjali products get Halal certificate in Qatar

HALAL Certified Spice Companies

Translate »