166 Views

உலகம் முழுவதும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30 லட்சத்தை நெருங்கி வருகிறது. உயிரிழப்பு, 2 லட்சத்து 7 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. அமெரிக்காவில், பலி எண்ணிக்கை 55 ஆயிரத்தை தாண்டி விட்டது.

உலக நாடுகளை, கொரோனா வைரஸ் தொற்று முடக்கி போட, மக்கள் எல்லாம் தவித்து வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் பாதிப்புகளும், உயிரிழப்புகளும் உயர்ந்து வருகின்றன.

அந்த வகையில்,  அமெரிக்காவில், பலி எண்ணிக்கை 55 ஆயிரத்தை தாண்டி விட்டது. அங்கு வைரஸ் தொற்று உறுதி ஆனவர்கள் எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்கும் நிலை உள்ளது.இத்தாலியில், உயிரிழப்பு 26 ஆயிரத்தை கடக்க, ஸ்பெயின் மற்றும் பிரான்சில், பலி எண்ணிக்கை 23 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.

இங்கிலாந்தில், கொரோனா காவு வாங்கியோரின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 700ஐ கடந்து விட்டது.பெல்ஜியத்தில் 7 ஆயிரம் பேரை பலி வாங்கிய கொரோனா, ஈரானில், 5 ஆயிரத்து 700 க்கும் மேற்பட்டோரின் உயிரை பறித்துள்ளது.

ஜெர்மனியில் 6 ஆயிரம் பேர், கொரோனாவுக்கு இரை ஆகியுள்ளனர்.சீனாவில், கொரோனாவுக்கு, 4 ஆயிரத்து 632 பேர் உயிரிழந்துள்ளனர்.நெதர்லாந்தில் பலி எண்ணிக்கை 4 ஆயிரத்து 500 ஐ நெருங்க, துருக்கியில், உயிரிழப்பு 2 ஆயிரத்து 800 ஐ கடந்து விட்டது.கனடாவில், கொரோனா பலி, 2 ஆயிரத்து 500 ஐ கடந்துள்ளது.

ஸ்வீடனில், பலி எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்து விட, ஆயிரம் பேருக்கு மேல் உயிரிழந்த நாடுகள் பட்டியலில், சுவிட்சர்லாந்து, மெக்சிகோ, அயர்லாந்து ஆகியவை இடம் பெற்றுள்ளன.

உலகம் முழுவதும் 19 லட்சத்து 8 ஆயிரத்து 278 பேர் , மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 8 லட்சத்து 78ஆயிரத்து 792 பேர், குணம் அடைந்து வீடு திரும்பி
விட்டனர். அதேநேரம், 57 ஆயிரத்து 602 பேர், நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இதனிடையே, கொரோனாவின் உற்பத்தி கேந்திரமான சீனாவின் உகான் நகரம், வைரஸ் தொற்று பாதிப்பு இல்லாத நகரமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவரும் குணம் அடைந்து விட்டதாக சீன அரசு தெரிவித்துள்ளது.

Translate »