182 Views
UP, Man Pedals, Wedding, Quarantine, Coronavirus, Corona, Covid-19, Curfew, Lockdown, india fights covid 19, corona crisis, punjab, up, உபி, திருமணம், சைக்கிள், பயணம், 850கிமீ, தனிமைப்படுத்தப்பட்ட, முகாம்

லக்னோ: ஊரடங்கு அமலானதால் வெளிமாநிலத்தில் சிக்கிய நபர் ஒருவர், தனது திருமணத்திற்காக 850 கி.மீ சைக்கிளில் பயணித்துள்ளார். பஞ்சாபில் இருந்து உத்தரபிரதேசம் சென்ற அவரை, கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் தங்க வைக்கப்பட்டார்.

உ.பி., மாநிலம் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் ரசூல்பூர் பகுதியை சேர்ந்த சோனு குமார் சவுகான், 24, என்பவர், பஞ்சாபில் லூதியானாவில் டைல்ஸ் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஏப்.,15ம் தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் அதற்குள்ளாகவே நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், அனைத்து போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டன. இதனால் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்த சோனு குமார், தனது மூன்று நண்பர்களுடன் சைக்கிளில் செல்ல திட்டமிட்டுள்ளார்.

latest tamil news


ஒரு வாரமாக இரவு, பகல் பாராமல் சைக்கிளிலேயே பயணித்த இவர்கள், உ.பி., மாநிலத்தை அடையும் போது, அங்குள்ள போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். 850 கி.மீ பயணித்த சோனு குமார், இன்னும் 150 கி.மீ தொலைவை அடைந்திருந்தால் தன் வீட்டை அடைந்திருக்கலாம். அதற்குள்ளாக போலீசாரிடம் சிக்கியதால், மாநிலங்கள் கடந்து வந்த அவரை நண்பர்களுடன் சேர்த்து பால்ராம்பூரில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.

இது குறித்து சோனு கூறுகையில், இங்கிருந்து சுமார் 150 கி.மீ. தொலைவில், நான் வீட்டை அடைந்திருந்தால் எனது திருமணமானது எந்தவிதமான ஆரவாரமும் இல்லாமல் எளிமையாக நடந்திருக்கும். கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இருப்பினும், உடல்நலம் மிக முக்கியமானது, திருமணமானது பின்னர் நடைபெறலாம், என்றார்.

பால்ராம்பூர் எஸ்.பி., தேவ்ரஞ்சன் வர்மா கூறுகையில், சவுகானும் அவரது நண்பர்களும் மாவட்டத்திற்குள் நுழையும் போது தடுத்து நிறுத்தப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு அனுப்பப்பட்டனர். அவர்களின் சோதனை முடிவுகள் 14 நாட்களில் எதிர்மறையாக வந்தால், அவர்கள் வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள், என்றார்.

Translate »