388 Views

ராமநாதபுரத்தை சேர்ந்த 71 வயது முதியவர் துபாயில் இருந்து வந்துள்ளார். அவர் உடல்நலக்குறைவு காரணமாக  சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் கடந்த கடந்த 2ம் தேதி உயிரிழந்துள்ளார். தற்போது அவரது ரத்த மாதிரிகளின் சோதனை முடிவுகள் வந்துள்ளன.அதில் அவருக்கு கொரோனா உறுதியாகி இருப்பது தெரியவந்துள்ளது.

அதேபோல், ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 61 வயது நபர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

முன்னதாக கொரோனாவுக்கு மதுரை, விழுப்புரம், தேனியை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Translate »