407 Views

தோனிக்கு மேக்கப் செய்து விடும் அவரது மகள் ஷிவாவின் வீடியோ ஒன்று பார்ப்பவர்களின் மனதை கவர்ந்துள்ளது.

இந்திய அணியில் தோனி இடம்பெறவில்லை என்றாலும் அவர் தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதனிடையே தோனிக்கு அவரது மகள் ஷிவா விளையாட்டாக மேக்கப் போ

டும் வீடியோவை சப்னா பாவ்வானி அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சப்னா பாவ்வானி தோனியின் தனிப்பட்ட ஒப்பணை கலைஞர். தோனிக்கு ஷிவா மேக்கப் செய்வது பழைய வீடியோ தான். இதனை தற்போது பதிவுசெய்துள்ள சப்னா, “தோனியின் மகளால் எனக்கு வேலை போய்விடும் என்று நினைக்கிறேன்“ என்று நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.

உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிக்கு பின் இந்திய அணியில் இடம்பெறாத தோனியின் ஆட்டத்தை ஐ.பி.எல் தொடரில் கண்டு ரசிக்க பலர் ஆர்வமாக இருந்தனர். ஆனால் கொரோனாவால் ஐ.பி.எல் தொடர் தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் தோனி உள்ளிட்ட சி.எஸ்.கே வீரர்கள் வீட்டில் ஓய்வில் உள்ளனர்.

No Fields Found.
Translate »